1 Matching Annotations
  1. Dec 2021
    1. இதற்கு அப்பால் மிகச்சிலர் என்னுடைய கருத்துக்களுடன் முரண்பட்டு என் படைப்புக்களில் ஈடுபாடு கொண்டு வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். எவ்வாறு என இலக்கியம் எப்படி எழுதப்படுகிறதென தெரிந்துகொண்டால் அது உங்களுக்குப் புரியும். இலக்கியப் படைப்பில் ஒரு படைப்பாளி முன்வைப்பது அவன் கற்று, தெளிந்து ஏற்றுக்கொண்டவற்றை அல்ல. அவனுடைய திட்டவட்டமான நிலைபாட்டை அல்ல. இலக்கியப்படைப்பு என்பது ஒருவகை கனவு என எடுத்துக்கொள்ளுங்கள். மொழியில் நிகழும் ஒரு கனவு. ஒரு படைப்பு என்பது அந்த எழுத்தாளன் மொழிவழியாக கண்ட ஒரு கனவு. நம் கனவு நம் கட்டுப்பாட்டில் இல்லை அல்லவா? நாம் நினைப்பதே நம் கனவில் இருக்கவேண்டும் என்பதில்லை அல்லவா? எழுத்தாளன் எல்லாரையும்போல ஒரு அன்றாட உள்ளம் கொண்டவன். அவனுக்கு பல கருத்துக்கள் இருக்கும். அவை அவன் தன் வாழ்க்கையிலிருந்து பெற்றுக்கொண்டவையாக இருக்கும். அவனுக்கான ஓர் அரசியலும் இருக்கலாம். ஆனால் அவன் எழுதுபவை அப்படியே அந்த கருத்துக்களை வெளிப்படுத்துபவை அல்ல. சிலசமயம் நேர்மாறாகவும் இருக்கலாம். அவனே அறியாத நுட்பங்கள் அதில் வெளிப்படலாம். ஆகவே எழுத்தை எழுத்தாளனிடமிருந்து பிரித்தே பார்க்கவேண்டும். எழுத்து தன்னளவில் முழுமையான ஒன்று.

      My personality and writings will be different

      • whenever i teach, i am different than before I start
      • whenever I write or think, My dream and heritage writes me