3 Matching Annotations
  1. Jan 2022
    1. Hyper-self-reflexivity, indicates an intensified looking back upon the self. The “self” may be the author, the reader/viewer, the work itself, or even the genre or medium that the work is part of. Self-reflexivity is not unique to metamodernism; it is also an important part of postmodern work but it functions differently in the two epistemes. I’ll use “self-reflexivity” as the name for the postmodern phenomenon and hyper-self-reflexivity for the metamodern version. Allow me to explain the difference.

      1. Hyper-Self-Reflexivity | தன்மலனிச்சை

    1. கட்டுரைநூல்களில் அந்நூலாசிரியர் உருவாக்க எண்ணும் கருத்துக்கு தேவையானவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். புனைவு அப்படிச் செயல்பட முடியாது.அதில் முக்கியமானவை என ஏதும் இல்லை. ஒரு சூழலைச் சொல்ல, ஒர் உணர்வைச் சொல்ல அது ‘எல்லாவற்றையும்’ சொல்லித்தான் ஆகவேண்டும். ஆசிரியர் அந்தக் கற்பனைக்குள் செல்லும்போது தன்னிச்சையாக எல்லாமே உள்ளே வந்து பதிவாகும். உணர்வுகள் இயல்பாகவே வந்து நிறையும். ஆகவே சின்னவிஷயங்கள், விளிம்புவிஷயங்கள், எதிர்மறை அம்சங்கள் எல்லாம் புனைவில் நிறைந்திருக்கும். ஆசிரியன் பொருட்படுத்துவன மட்டுமல்ல அவனால் பொருட்படுத்தாதவை கூட புனைவில் இருக்கும்.

      Reading Fiction is hyper-self-reflexivity

    2. அவருக்கென இருப்பது அவருடைய அனுபவங்கள் மட்டுமே. அந்த அக- புற அனுபவங்களில் இருந்து அவர் நேரடியாக அடைவனவே அவருக்குரியவை. அவற்றை அளவுகோலாகக் கொண்டுதான் அவர் எல்லாவற்றையும் மதிப்பிட்டு தனக்கான முடிவுகளை அடையமுடியும். அத்தனைபேரும் இயல்பாகச் செய்வது அதைத்தான். ஆனால் எவராக இருந்தாலும் ஒருவரின் அனுபவம் என்பது மிகமிக எல்லைக்குட்பட்டது. அதைக்கொண்டு அனைத்தையும் புரிந்துகொள்ளுமளவுக்கு ஆழ்ந்த அறிதல்களை அடையமுடியாது. அதற்குத்தான் புனைவுகளை வாசிப்பது உதவுகிறது.அவை நாம் அடைந்த அனுபவங்களை கற்பனையில் விரிவாக மீண்டும் அனுபவிக்க உதவுகின்றன. உதாரணமாக, நான் குமரிமாவட்ட வாழ்க்கையையும் தர்மபுரி மாவட்ட வாழ்க்கையையும் மட்டுமே அறிந்தவன். ஆனால் தேவிபாரதியின் நாவல்கள் வழியாக என்னால் ஈரோடு மாவட்ட வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கண்மணி குணசேகரன் வழியாக விழுப்புரம் வட்டார வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கீரனூர் ஜாகீர்ராஜா வழியாக இஸ்லாமிய வாழ்க்கைக்குள்ச் செல்லமுடியும். புனைவுகளினூடாக தமிழகம் முழுக்க வாழ்ந்த அனுபவத்தை நான் அடையமுடியும். அவ்வாசிப்பு எனக்கு உண்மையில் வாழ்ந்த அனுபவத்துக்கு நிகரான அறிதல்களை அளிக்கமுடியும்.

      Fiction extends limits of my internal and external experience