புனைவிலக்கியமே சமகாலத்து உணர்ச்சிகளை உருவாக்குகிறது. அதை அறிய புனைவிலக்கியத்தை வாசித்தாகவேண்டும். புனைவிலக்கியம் செயல்படும் விதமென்ன என்பது இன்று ஆய்வாளர்களால் விரிவாகவே பேசப்பட்டுவிட்டது. புனைவிலக்கியம் எழுத்தில் இருந்து பேச்சுக்குச் செல்கிறது. நிகழ்த்துகலையாகிறது. மக்கள் நினைவில் தொன்மம் ஆகிறது. தொன்மம் மீண்டும் இலக்கியமாகி விரிவடைகிறது. சிலப்பதிகாரக்கதை தமிழ் மக்களிடையே வாய்மொழிக்கதையாக இருந்தது. சிலப்பதிகாரமாக ஆகியது. மீண்டும் கதையாகி, தொன்மம் ஆகியது. அத்தொன்மம் மீண்டும் நவீன இலக்கியமாக ஆகியது
நிகழ்த்துக்கலை --> தொன்மம் --> புனைவு இலக்கியம்
- if I have to manage #my/emotion and my #savitha/emotion