தத்துவ அறிஞன் கலைஞன் என்றால் வரும் காலம் அவனை கண்டுகொள்ளும் என்ற நிச்சயம் ஏது, இவ்வாறான கேள்விகள் மூலம் அனைத்தையும் விலக்கி ஏதுமில்லா வெளியில் இருந்துகொண்டிருந்தேன். பின்பு ஓரிடத்தில் ரமண மஹரிஷியின் ஒரு மேற்கோள் படித்தேன்- “How do you treat others?” “There are no others” அனைத்துமாதல் என்பது எவ்வளவு மகத்தானது. முன்பு நீங்கள் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது. தன் வயலின் மேல் ஒரு கொக்கு அமர்ந்த போது உடல் விதிர்த்த விவசாயி அந்த வயலாகவும் கொக்காகவும் கூட இருக்கிறான். அனைத்தையும் தானாக்கி தன்னை அனைத்துமாக்கி என்றுமிருத்தலே விடை. வெண்முரசு என்றும் இருக்கும். அதை இயற்றியதால் நீங்களும்வாசிப்பதால் நானும் கூட.நன்றி.
1 Matching Annotations
- Nov 2021
-
www.jeyamohan.in www.jeyamohan.in
Tags
Annotators
URL
-